கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மே மாதம் 21ஆம் தேதி அதிரடியாக குறைத்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. அதன்படி, சென்னையில் லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் தொடர்ந்து 20ஆவது நாளாக இன்றும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இன்று (ஜூன் 10, 2022) நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், பிரிட்டனில் பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உலகளவில் கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது. இதனால் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதனால், பிரிட்டன் வரலாற்றில் முதன் முறையாக நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 176 ரூபாயாக உயர்ந்துள்ளது. அந்நாட்டு அரசு, இந்தாண்டு மார்ச்சில் பெட்ரோல், டீசல் வரியை குறைத்தது. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு, 48 ரூபாய் வீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
Must Read : புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு... இது எந்த அளவுக்கு பலன் அளிக்கும்..? மருத்துவர்கள் விளக்கம்
ஆனால், பெட்ரோல் விற்பனையாளர்கள் இந்த வரி குறைப்பு சலுகையை நுகர்வோருக்கு வழங்குவதில்லை என்ற புகார் எழுந்தது. பெட்ரோல், டீசல் விலை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் வரி குறைப்பு பயனை, நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.