Home /News /business /

பெட்ரோல், டீசல் இன்றைய (ஜூன் 1, 2022) விலை இதுதான்

பெட்ரோல், டீசல் இன்றைய (ஜூன் 1, 2022) விலை இதுதான்

பெட்ரோல் டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலை

Petrol Diesel Price Today : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை 10ஆவது நாளாக இன்றும் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மே மாதம் 21ஆம் தேதி அதிரடியாக குறைத்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. அதன்படி, சென்னையில் லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, 10ஆவது நாளாக இன்றும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் இன்று (ஜூன் 1, 2022) நேற்றையை விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. விலையில் மாற்றம் செய்யப்படாததால் பொதுமக்களும் வாகன ஓட்டிகைளும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் திமுக அரசு பெட்ரோல் - டீசல் விலையை குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது. சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜகவினர் கோட்டையை நோக்கி முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பெட்ரோல் டீசல் விலையை திமுக அரசு உடனடியாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொடுத்த வாக்குறுதிபடி பெட்ரோல், டீசல் விலையை 30 நாட்களுக்குள் குறைக்கவில்லை என்றால் திருச்சியில் பாஜக சார்பில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடத்துவோம் என கூறினார்.

    Must Read : தேசிய கல்விக் கொள்கையை படித்து புரிந்து கொண்ட பின்னரே கருத்து தெரிவிக்கிறோம்.. ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

    இதையடுத்து காவல்துறையின் தடுப்பு வேலியை தாண்டி கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டத்தை துவக்கினர். அப்போது போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol Diesel Price, Petrol price, Petrol-diesel

    அடுத்த செய்தி