Home /News /business /

நற்செய்தி... பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை - இன்றைய (ஏப்ரல் 8-2022) விலை நிலவரம்

நற்செய்தி... பெட்ரோல், டீசல் விலையில் இன்றும் மாற்றம் இல்லை - இன்றைய (ஏப்ரல் 8-2022) விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

Petrol Diesel Price Today : பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், வரலாறு காணாத உச்சமாக டீசல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.

    பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சிலிண்டர் விலை அதிகரிப்பால், சென்னையில் டீ, காபி விலை 3 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, ஆங்காங்கே பிரியாணி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் (புதன் கிழமை) பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    Must Read : செங்கல்பட்டில் ரயில் மோதி மூன்று இளைஞர்கள் பலி.. செல்ஃபி எடுக்கும்போது விபத்து ஏற்பட்டதா? போலீஸார் விசாரணை

    இந்நிலையில், புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்ட ஊர்வலம் நடத்தப்பட்டது. இதில், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி சைக்கிளில் வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அப்போது, விலைவாசி உயர்வால் ஏழைகள் பாதிக்கப்படுவதை சுட்டிக்காட்டுவதற்காக சைக்கிளில் வந்ததாக தெரிவித்தார்.

    மாவட்டவாரியாக இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்:

    சென்னை - ரூ.110.85

    கோவை - ரூ.111.33

    மதுரை - ரூ.111.29

    திருச்சி - ரூ.111.50

    சேலம் - ரூ.111.48

    கன்னியாகுமரி - ரூ.112.12

    அரியலூர் - ரூ.111.84

    கடலூர் - ரூ.113.08

    தருமபுரி - ரூ.112.02

    திண்டுக்கல் - ரூ.111.85

    ஈரோடு - ரூ.111.48

    காஞ்சிபுரம் - ரூ.111.13

    கரூர் - ரூ.111.59

    கிருஷ்ணகிரி - ரூ.112.44

    நாகப்பட்டினம் - ரூ.112.37

    நாமக்கல் - ரூ.111.36

    நீலகிரி - ரூ.113.01

    பெரம்பலூர் - ரூ.112.08

    புதுக்கோட்டை - ரூ.112.36

    ராமநாதபுரம் - ரூ.111.96

    சிவகங்கை - ரூ.111.54

    தேனி - ரூ.112.07

    தஞ்சாவூர் - ரூ.111.82

    திருவாரூர் - ரூ.112.07

    திருநெல்வேலி - ரூ.111.65

    திருப்பூர் - ரூ.111.29

    திருவள்ளூர் - ரூ.111.74

    திருவண்ணாமலை - ரூ.111.64

    தூத்துக்குடி - ரூ.111.24

    வேலூர் - ரூ.112.45

    விழுப்புரம் - ரூ.112.14

    விருதுநகர் - ரூ.111.98
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி