Home /News /business /

பெட்ரோல், டீசல் இன்றைய (ஏப்ரல் 29-2022) விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் இன்றைய (ஏப்ரல் 29-2022) விலை நிலவரம்

பெட்ரோல்-டீசல்

பெட்ரோல்-டீசல்

Petrol Diesel Price Today : பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து 23ஆவது நாளாக இன்றும் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

    சர்வதேச சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், வரலாறு காணாத உச்சமாக டீசல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.

    எரிபொருட்களின் விலை அதிகரித்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதி (புதன் கிழமை) பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து 23வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் பிரதமர் மோடி முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கொரோனா பரவல் குறித்து மாநில சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்கள் பெட்ரோல். டீசல் மீதான வாட் வரியை குறைக்கவில்லை என குற்றம்சாட்டினார்.

    இந்த குற்றச்சாட்டு குறித்து தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விளக்கம் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், 2014-க்கு பிறகு கச்சா எண்ணெய் விலை சரிந்தபோது, அதற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கவில்லை என கூறினார். மாநிலங்களோடு பகிர்ந்துகொள்ளும் கலால் வரியில் கைவைத்து வருவாயை குறைத்ததாகவும், மத்திய அரசுக்கு மட்டும் செல்லும் வரிகளை கடுமையாக உயர்த்தி வருவாய் ஈட்டுவதாகவும் முதலமைச்சர் சாடினார். மேலும், சில மாநில தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது போல் மத்திய அரசு வேடமிட்டதாக காட்டமாக தெரிவித்த ஸ்டாலின, மத்திய அரசுக்கு முன்னரே பெட்ரோல் விலையை குறைத்தது தமிழ் நாடு அரசு என்று கூறினார்.

    இந்நிலையில், தமிழ் நாட்டின் பெட்ரோல், டீசல் விலை குறித்து விளக்கம் அளித்த நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான வரியை 200 சதவீதமும் டீசல் மீதான வரியை 500 சதவிகிதமும் மத்திய அரசு உயர்த்தியுள்ளதாக தெரிவித்தார். பெட்ரோல், டீசலில் மத்திய அரசின் வரிவிதிப்பு முறையே, சாமானியர்களை பாதிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் சாடினார். பெட்ரோல் விலையில் மாநில அரசின் வரி சுமார் 50 சதவிகிதம் அதிகரித்துள்ள நிலையில், மத்திய அரசின் வரி 300 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

    Must Read : ஆர்ஆர்பி தேர்வர்களுக்கு வெளிமாநிலங்களில்‌ மையங்களை ஏற்படுத்துவது நியாயமற்றது.. சு.வெங்கடேசன்‌ எம்‌.பி

    இதற்கிடையில், வாட் வரி குறித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே, காங்கிரஸ் கட்சியின் தீபேந்தர் ஹூடா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 2013- ஆம் ஆண்டு முதல் பெட்ரோல் மீதான வாட் வரி உயர்த்தப்படவில்லை என கேரள அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி