சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், வரலாறு காணாத உச்சமாக டீசல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.
எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதி (புதன் கிழமை) பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 17வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
Must Read : தமிழகத்தில் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி
மாவட்ட வாரியாக பெட்ரோல் விலை :
சென்னை - ரூ.110.85
கோவை - ரூ.111.33
மதுரை - ரூ.111.43
திருச்சி - ரூ.111.64
சேலம் - ரூ.111.22
அரியலூர் - ரூ.111.84
கடலூர் - ரூ.112.73
தருமபுரி - ரூ.112.04
திண்டுக்கல் - ரூ.111.51
ஈரோடு - ரூ.111.32
காஞ்சிபுரம் - ரூ.111.37
கன்னியாகுமரி - ரூ.111.78
கரூர் - ரூ.111.14
கிருஷ்ணகிரி - ரூ.112.47
நாகப்பட்டினம் - ரூ.112.37
நாமக்கல் - ரூ.111.43
நீலகிரி - ரூ.113.01
பெரம்பலூர் - ரூ.111.86
புதுக்கோட்டை - ரூ.111.63
ராமநாதபுரம் - ரூ.112.23
சிவகங்கை - ரூ.111.69
தேனி - ரூ.112.10
தஞ்சாவூர் - ரூ.111.82
திருவாரூர் - ரூ.111.79
திருநெல்வேலி - ரூ.111.65
திருப்பூர் - ரூ.111.39
திருவள்ளூர் - ரூ.111.17
திருவண்ணாமலை - ரூ.112.14
தூத்துக்குடி - ரூ.111.24
வேலூர் - ரூ.112.16
விழுப்புரம் - ரூ.112.52
விருதுநகர் - ரூ.111.89
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.