Home /News /business /

ஆறுதல்... பெட்ரோல், டீசல் விலை இன்றும் (ஏப்ரல் 20-2022) மாற்றம் இல்லை

ஆறுதல்... பெட்ரோல், டீசல் விலை இன்றும் (ஏப்ரல் 20-2022) மாற்றம் இல்லை

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

Petrol Diesel Price Today : பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து 14ஆவது நாளாக இன்றும் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், வரலாறு காணாத உச்சமாக டீசல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.

    பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதி (புதன் கிழமை) பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், தொடர்ந்து 14வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகின. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

    ரஷ்யாவில் இருந்து மிகவும் குறைவான அளவிலேயே கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கி வந்தது. அதன்படி, 2022ம் நிதியாண்டில் ரஷ்யாவிலிருந்து இந்தியா 0.419 மில்லியன் மெட்ரிக் டன் (MMT) கச்சா எண்ணெய்யை மட்டுமே இறக்குமதி செய்துள்ளது.

    Must Read : 10%க்கு குறைவான வட்டி.. டூவீலர் லோன் எடுக்கும் ஐடியா இருந்தால் நீங்கள் செல்ல வேண்டிய இடம்!

    இந்நிலையில், சமீபத்தில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கான ஆர்டர் அளவு 15 மில்லியன் பேரலாக அதிகரித்துள்ளது. மேலும், இந்திய நிறுவனங்கள் அதிகப்படியான ரஷ்ய கச்சா எண்ணெய்யை ஆர்டர் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி