Home /News /business /

பெட்ரோல், டீசல் விற்பனை குறைகிறது : இன்றைய (ஏப்ரல் 19-2022) விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விற்பனை குறைகிறது : இன்றைய (ஏப்ரல் 19-2022) விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

Petrol Diesel Price Today : பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து 13ஆவது நாளாக இன்றும் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், வரலாறு காணாத உச்சமாக டீசல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.

    பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் புதன் கிழமை பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், தொடர்ந்து 13வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகின. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி முடிந்த முதல் பாதியில் பெட்ரோல் விற்பனை 10 சதவீதமும், டீசல் விற்பனை 15.6 சதவீதமும் சரிவை கண்டுள்ளது. விலை உயர்வு காரணமாகவே பெட்ரோல், டீசல் விற்பனை குறைந்துள்ளதாக கருதப்படுகிறது. இதேபோல், எரிவாயு சிலிண்டர் விற்பனையும் 1.7 சதவீதம் குறைந்துள்ளது.

    Must Read : 3 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பில் முக்கிய மாற்றம்.. வசூலை உயர்த்த திட்டம்?

    ஜெட் எரிபொருள் விலையும் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது, இதன் விளைவாக மாதந்திர விற்பனை 20.5 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி