Home /News /business /

பெட்ரோல், டீசல் விலை 10வது நாளாக இன்றும் (ஏப்ரல் 16-2022) மாற்றம் இல்லை

பெட்ரோல், டீசல் விலை 10வது நாளாக இன்றும் (ஏப்ரல் 16-2022) மாற்றம் இல்லை

பெட்ரோல்-டீசல்

பெட்ரோல்-டீசல்

Petrol Diesel Price Today : பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து 10ஆவது நாளாக இன்றும் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், வரலாறு காணாத உச்சமாக டீசல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.

    பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் புதன் கிழமை பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், தொடர்ந்து 10வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    இந்நிலையில், சட்டீஸ்கர் மாநிலத்திற்கு ஒரு நாள் பயணமாக சென்ற மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி. அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பெட்ரோல் விலையை குறைக்க மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க வேண்டும் என்று கூறினார்.

    Must Read : சித்திரைப் பெருவிழாவின் உச்ச நிகழ்வு - மதுரை குலுங்க இன்று வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

    மேலும், பெட்ரோல் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதே எங்களின் முயற்சி. எனவேதான் கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. மாநில அரசுகளையும் அதைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டது என்று கூறினார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி