சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், வரலாறு காணாத உச்சமாக டீசல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் புதன் கிழமை பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து. சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து 9வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகின. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கையாள்வதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க, மத்திய நிதி அமைச்சகம், மத்திய எண்ணெய்வள அமைச்சகங்களின் அதிகாரிகளும், அரசு கட்டுப்பாட்டில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் சமீபத்தில் ஆலோசனை நடத்தினர்.
Must Read : மகன்கள் கைவிட்டதால் மண்ணை உண்டு உயிர் வாழ்ந்த மூதாட்டி... வீடியோ வெளியான நிலையில் பூட்டை உடைத்து மீட்ட காவல்துறை!
இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய நிதியமைச்சகம் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க இப்போதைக்கு முடியாது என்று கூறி, எண்ணெய்வள அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்க மறுத்துள்ளது. இதற்கு மாறாக எண்ணெய் நிறுவனத்தின் வாயிலாக விலை குறைப்பை கொண்டு வர முயற்சி செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.