Home /News /business /

ஆறுதல்... பெட்ரோல், டீசல் விலை 8வது நாளாக இன்றும் (ஏப்ரல் 14-2022) மாற்றம் இல்லை

ஆறுதல்... பெட்ரோல், டீசல் விலை 8வது நாளாக இன்றும் (ஏப்ரல் 14-2022) மாற்றம் இல்லை

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

Petrol Diesel Price Today : பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து 8வது நாளாக இன்றும் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், வரலாறு காணாத உச்சமாக டீசல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.

    பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் புதன் கிழமை பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், தொடர்ந்து 8வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகின. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

    Must Read : இனி ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், அவற்றை உடனடியாக திரும்பப் பெறக்கோரியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது இருசக்கர வாகனம் மற்றும் கியாஸ் சிலிண்டருக்கு இறுதிச்சடங்கு செய்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மேலும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி