Home /News /business /

Petrol Diesel price | பெட்ரோல், டீசல் போட போறீங்களா? இன்றைய (ஏப்ரல் 13-2022) விலை இதுதான்!

Petrol Diesel price | பெட்ரோல், டீசல் போட போறீங்களா? இன்றைய (ஏப்ரல் 13-2022) விலை இதுதான்!

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

Petrol Diesel Price Today : பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து ஏழாவது நாளாக இன்றும் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், வரலாறு காணாத உச்சமாக டீசல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது.

    பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சிலிண்டர் விலை அதிகரிப்பால், சென்னையில் டீ, காபி விலை 3 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கடந்த புதன் கிழமை பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து ஏழாவது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 100.94 ரூபாய்க்கும் விற்பனையாகின. இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில், பெட்ரோலிய விலைஉயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசின் கையிருப்பிலிருந்து நாள்தோறும் 10 லட்சம் பேரல் பெட்ரோலியத்தை விடுவிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உலகம் முழுவதும் உணவு மற்றும் எரிவாயு விலை உயர்வுக்கு புதினின் ஊடுருவலே காரணம் என்று தெரிவித்தார்.

    Must Read : Beast மோடில் விஜய் ரசிகர்கள்.. ஆட்டம் பாட்டம் என அசத்தல் - தூத்துக்குடியில் விடிய விடிய கொண்டாட்டம்

    இதனைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசின் கையிருப்பிலிருந்து நாள்தோறும் 10 லட்சம் பேரல் வீதம் அடுத்த 6 மாதங்களுக்கு பெட்ரோலியத்தை விடுவிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கூடுதலாக 6 கோடி பேரல் பெட்ரோலியத்தை விடுவிக்க 30-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் பைடன் தெரிவித்துள்ளார். இதன்மூலம், பெட்ரோலிய விலை குறையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol Diesel Price, Petrol price, Petrol-diesel

    அடுத்த செய்தி