இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

மாதிரி படம்

பிப்ரவரி 2, செவ்வாய்க்கிழமை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தொடர்ந்து ஆறாவது நாளாக மாற்றமில்லாமல் இருந்தது.

 • Share this:
  இந்திய தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலையில் மாற்றமில்லாமல், லிட்டருக்கு ரூ.86.30 ஆகவும், டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.76.48 ஆகவும் இருப்பதாகவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

  பிப்ரவரி 2, செவ்வாய்க்கிழமை பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தொடர்ந்து ஆறாவது நாளாக மாற்றமில்லாமல் இருந்தது. தேசிய தலைநகர் டெல்லியில், பெட்ரோல் விலையில் மாற்றமில்லாமல் லிட்டருக்கு 86.30 ஆகவும், டீசல் லிட்டருக்கு. 76.48 ஆகவும் இருப்பதாக நாட்டின் மிகப்பெரிய எரிபொருள் சில்லறை விற்பனையாளரான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

  பட்ஜெட் 2021 : தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்கள் பிரேத்யகமாக அறிவிப்பு

  இதற்கிடையே, மும்பையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு முறையே 92.86 ஆகவும், 83.30 ஆகவும் உள்ளது. நான்கு பெருநகரங்களில் இது தான் அதிகம்.

  சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.88.82 ஆகவும், டீசல் ரூ.81.71 ஆகவும் உள்ளது. கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.87.69 ஆகவும், டீசல் ரூ.80.08-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை அந்நிய செலாவணி விகிதங்களில் ஏதேனும் மாற்றங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, உள்நாட்டு எரிபொருளின் விலையை உலகளாவிய வரையறைகளுடன் இணைக்கின்றன. எரிபொருள் விலையில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அது ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் செயல்படுத்தப்படும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: