• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பெட்ரோல், டீசல் விலை: GST-க்குள் கொண்டு வர விவாதிக்கத் தயார் - நிர்மலா சீதாராமன்

பெட்ரோல், டீசல் விலை: GST-க்குள் கொண்டு வர விவாதிக்கத் தயார் - நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

பெட்ரோல் விலை டீசல் விலை விவரம், ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் வருமா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவது என்ன? பெட்ரோல் டீசல் இன்றைய விலை நிலவரம்

  • Share this:
    அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் மீட்டிங்கில் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி- வரிக்குள் கொண்டு வர விவாதிக்கத் தயாராக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

    நிதிமசோதா, 2021- குறித்து நிர்மலா சீதாராமன் மக்களவையில் பேசும்போது, மத்திய அரசு மட்டும் வரி விதிக்கவில்லை, மாநில அரசுகளும் வரி விதிக்கின்றன. எனவே இருதரப்பினருக்கும் இடையே ஒரு பொது புரிந்துணர்வு வேண்டும் என்கிறார் நிர்மலா சீதாராமன்,

    “மகாராஷ்டிராவில் அதிகபட்ச வரி பெட்ரோல் டீசல் மீது விதிக்கப்படுகிறது. ஏதோ ஒரு மாநிலம் கூட குறைத்து விதிக்கிறது என்பதை நான் கூறவில்லை. விஷயம் என்னவெனில் மத்திய அரசு மட்டுமல்ல மாநில அரசுகளும் பெட்ரோல் டீசல் வரி விதிக்கின்றன.

    அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல் டீசல் வரியை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதை விவாதிக்கத் தயாராகவே இருக்கிறோம். கோவிட் 19 பெருந்தொற்று நோய் காரணமாக எழுந்த சில பல தற்காலிக பின்னடைவை சரிகட்ட நாங்கள் வரியை அதிகரிக்கப் போவதில்லை” என்ற நிர்மலா சீதாராமன், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி, வேலையில் அமர்த்தும் நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாதபட்சத்தில் வரி விலக்குள்ள முதலீட்டின் உச்ச வரம்பு ரூ. 5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

    அதாவது நிறுவனங்களின் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு இல்லாதவர்கள் வருங்கால வைப்பு நிதியை முதலீடு செய்வதன் மீதான வரி விலக்கு முதலீடு உச்ச வரம்பு ரூ.5 லட்சம் என்று கூறியுள்ளார் நிர்மலா சீதாராமன்.

    பெட்ரோல் டீசல் விலை இன்று (மார்ச் 24, 2021)

    டெல்லி: பெட்ரோல் ரூ.91.17, டீசல் ரூ.81.47

    மும்பை: பெட்ரோல் விலை ரூ.97.57, டீசல் ரூ. 88.60.

    கொல்கத்தா: பெட்ரோல் விலை 91.35, டீசல் விலரி ரூ.84.35

    சென்னை: பெட்ரோல் விலை ரூ.93.11, டீசல் விலை 86.45.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: