Petrol-Diesel Price | பெட்ரோல், டீசல் விலை கடந்த 3 வாரங்களில் எவ்வளவு உயர்ந்திருக்கிறது தெரியுமா?

பெட்ரோல் நிலையம்

ஊரடங்கு அமலில் இருப்பதால் ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மேலும் கவலை அடைந்துள்ளனர்.

  • Share this:
    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. இந்தநிலையில் மே மாதம் முதல் வாரம் வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 94 ரூபாய் 71 காசுகளாகவும், டீசல் விலை லிட்டர் 88 ரூபாய் 62 காசுகளாகவும் உள்ளது.

    அதன்படி கடந்த ஏப்ரல் 30ம் தேதி 92 ரூபாய் 42 காசுகளாக இருந்த பெட்ரோல் விலை, அதன்பிறகு உயர்ந்து மே 7,8 மற்றும் 9ம் தேதிகளில் 93 ரூபாய் 20 காசுகளுக்கு விற்பனை ஆனது. இதனைதொடர்ந்து மே 14ம் தேதி 94 ரூபாய் 15 காசுகளாக பெட்ரோல் விலை அதிகரித்தது. அதன்பிறகு படிப்படியாக அதிகரித்து 94 ரூபாய் 71 காசுகளாக உயர்ந்துள்ளது. இதனால் கடந்த 3 வாரங்களில் மட்டும் இரண்டு ரூபாய் 50 காசுகள் வரை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது.

    மேலும் படிக்க... Petrol-Diesel Price : சென்னையில் இன்றைய (மே 22-2021) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

    ஊரடங்கு அமலில் உள்ளதால் ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு மேலும் கவலை அளிப்பதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: