83 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்தது

நாடு முழுவதும் 83 நாட்களுக்கு பின் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தி உள்ளன.

83 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு அமலுக்கு வந்தது
கோப்புப் படம்
  • Share this:
 83 நாட்களுக்கு பின் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் மாற்றி அமைத்து வந்தன. அதேசமயம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்தாலும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. கடந்த மார்ச் 16ம் தேதி முதல் விலையில் எந்த மாற்றமும் இன்றி இருந்தன. இந்த நிலையில் 83 நாட்களுக்கு பின் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 53 காசுகள் உயர்ந்து, 76 ரூபாய் 07 காசுகளுக்கும், டீசல் 52 காசுகள் உயர்ந்து 68 ரூபாய் 74 காசுகளுக்கும் விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.








First published: June 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading