பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு... இன்றைய (மார்ச் 27-2022) நிலவரம்
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு... இன்றைய (மார்ச் 27-2022) நிலவரம்
Petrol Diesel Price Today : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி இன்றும் விலை அதிகரித்துள்ளது.
Petrol Diesel Price Today : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி இன்றும் விலை அதிகரித்துள்ளது.
137 நாட்களுக்கு பிறகு, நாட்டில் அண்மையில், பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கப்பட்டது. இதேபோல, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் 50 ரூபாய் அதிகரித்தது. இந்நிலையில், அதிலிருந்து தினசரி பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது.
நேற்று பெட்ரோலின் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.104.43-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.94.47-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.47 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 0.53 காசுகள் உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.104.90-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.95.00-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து நான்கு நாட்களாக விலையேற்றம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Published by:Esakki Raja
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.