Home /News /business /

இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை... இன்றைய (மார்ச் 23-2022) விலை நிலவரம்

இன்றும் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை... இன்றைய (மார்ச் 23-2022) விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Petrol Diesel price : 137 நாட்களாக விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யட்டு வந்த பெட்ரோல், டீசல் நேற்று உயர்த்தப்பட்ட நிலையில், இன்றும் மீண்டும் அதிகரித்துள்ளது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த ஆண்டு மிகவும் அதிகரித்தது. இதனால், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில், பெட்ரோல், டீசல் விலை லிட்டர் தலா, 100 ரூபாயை தாண்டி விற்பனையானது. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சரக்கு வாகனங்களின் வாடகை கட்டணம் உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது.

    இந்நிலையில், மத்திய அரசு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை நவம்பர் மாதம் குறைத்தது. அதன்படி நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகையன்று நாடு முழுதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு, 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு, 10 ரூபாயும் குறைந்தது.

    அதனைத் தொடர்ந்து கடந்த 137 நாட்களாக விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யட்டு வந்த பெட்ரோல், டீசல் நேற்று அதிகரித்தது. அதன்படி, சென்னையில் நேற்று ஒருலிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 16 காசுகளுக்கும், டீசல் 92 ரூபாய் 19 காசுகளுக்கும் விற்பனை செய்யட்டது. இதேபோல, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் 50 ரூபாய் அதிகரித்து நேற்று 967.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், சென்னையில் 2ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரித்துள்ளது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து 102 ரூபாய் 91 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 92 ரூபாய் 95 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    Must Read : சமையல் எரிவாயு விலை , பெட்ரோல் விலை உயர்வு : பாஜகவை கடுமையாக விமர்சித்த கே.எஸ் அழகிரி

    உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையடுத்து அந்நாட்டு மீது பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்தன. உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடை காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர்ந்தது. இந்தியாவின் கச்சா எண்ணயின் குறைந்தபட்ச தேவை நாள் ஒன்றிற்கு 35 லட்சம் பேரல் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol Price hike

    அடுத்த செய்தி