Home /News /business /

Petrol Diesel price | ஆறுதல்.. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை - இன்றைய (ஏப்ரல் 7-2022) விலை நிலவரம்

Petrol Diesel price | ஆறுதல்.. பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை - இன்றைய (ஏப்ரல் 7-2022) விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

Petrol Diesel Price Today : பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், வரலாறு காணாத உச்சமாக டீசல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. சிலிண்டர் விலை அதிகரிப்பால், சென்னையில் டீ, காபி விலை 3 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    Must Read : தங்கம் அல்லது நிலம் வாங்கும் போது யாரெல்லாம் வரி கட்ட வேண்டும் தெரியுமா?

    இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. நேற்று விற்பனை செய்யப்பட்ட அதே விலையில் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி