Home /News /business /

எல்பிஜி விலை இந்தியாவில்தான் அதிகம்; அமெரிக்காவில் இந்தியாவை விட பெட்ரோல் விலை குறைவு- எப்படி?

எல்பிஜி விலை இந்தியாவில்தான் அதிகம்; அமெரிக்காவில் இந்தியாவை விட பெட்ரோல் விலை குறைவு- எப்படி?

பெட்ரோல் - டீசல், எல்பிஜி, மாதிரிப்படம்

பெட்ரோல் - டீசல், எல்பிஜி, மாதிரிப்படம்

அமெரிக்காவில் பெட்ரோல் கேலனில் விற்கப்படுகிறது, அந்த கேலன் அளவை லிட்டருக்கு மாற்றியும் டாலர் விலையை இந்திய ரூபாய்க்கு மாற்றியும் பார்த்தால் அமெரிக்காவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.97. இது இந்தியாவில் பல மாதங்களாக விற்று வரும் பெட்ரோல் விலையை விடக் குறைவு.

இத்தனைக்கும் அமெரிக்காவில் கேசோலின் விலை 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உயர்வு கண்டுள்ளது, இருப்பினும் இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை ஒப்பிடும்போது மலிவுதான் என்கிறது சில ஆய்வுகள்.

அமெரிக்காவில் லிட்டர்களில் பெட்ரோல் விற்கப்படாது, கேலன் என்ற கணக்கில்தான் விற்கப்படும். அமெரிக்காவில் ஒரு கேலன் கேசோலின் என்பது தோராயமாக 3.78 லிட்டர்கள் பெட்ரோல் ஆகும். ஒரு கேலன் விலை 4.31 அமெரிக்க டாலர்களாகும், அதாவது ரூபாயின் படி ரூ.329 ஆகும். இது மார்ச் 10ம் தேதி நிலவரப்படி. இந்தக் கணக்கின் படி இந்திய ரூபாய்க்கு மாற்றிப் பார்த்தால் அமெரிக்காவில் ரூபாய் மதிப்பின் படி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.97.

இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐத் தாண்டி சென்று விட்டது, 106, 109 என்று பெட்ரோல் விற்கப்படுகிறது.

அமெரிக்காவிலும் பிரதேசத்துக்கு பிரதேசம் பெட்ரோல் விலை மாறுபடும் அந்த வகையில் கலிபோர்னியாவில் கேலன் பெட்ரோல் 5.69 டாலர், நெவாடா 4.87 டாலர், ஹவாய் 4.81 டாலர், ஆரிகன் 4.72 டாலர். வாஷிங்டன் 4.70 டாலர் இவையெல்லாம் மார்ச் 15 தேதி வாக்கிலான நிலவரங்கள். இதில் ரூபாய் மதிப்புக்கு கன்வர்ட் செய்தால் கலிபோர்னியா மட்டுமே இந்தியாவில் விற்கப்படுவதை காட்டிலும் விலை அதிகம் அங்கு லிட்டர் பெட்ரோல் ரூ.114.82 மற்ற மாகாணங்களில் ரூ.95க்கும் குறைவுதான்.

அதே போல் அமெரிக்காவில் சீப்பாக பெட்ரோல் விற்கும் இடங்கள் உண்டு, கன்சாஸில் இந்திய ரூபாயின் படி லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.88 தான். மிசவ்ரி, ஓக்லஹாமா ஆகிய மாகாணங்களில் லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.69 தான்.

இந்தியாவில்தான் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகம்- ஆய்வு:

ஒருநாட்டின் உள்ளூர் சந்தையில் அந்த நாட்டின் ரூபாய் மதிப்புக்கு என்ன வாங்கும் சக்தி உள்ளதோ அந்த அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உலகிலேயே மிக அதிகம் என்கிறது ஆய்வு ஒன்று. அதாவது  பர்ச்சேசிங் பவர் பேரிட்டி என்ற ppp அடிப்படை மாதிரியில் ஆராய்ந்தால் இந்தியாவில் பெட்ரோல் விலை உலகிலேயே 4வது அதிக விலை கொண்டுள்ளது,

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உலகிலேயே இந்தியாவில் தான் அதிகம். பன்னாட்டு நிதியம் ஐ.எம்.எஃப் 2022-ல் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பை இந்த பிபிபி அளவுகோல்களின் படி சராசரியாக டாலர் ஒன்றுக்கு ரூ.22.6 என்று நிர்ணயித்துள்ளது, இந்தக் கணக்கின் படி அமெரிக்காவில் ஒரு ரூபாய்க்கு கிடைப்பது இங்கு 22 ரூபாய்க்கு கிடைக்கிறது என்றுதான் பிபிபி கணக்கீட்டின் படி சரியானதாகும்.

டாலரின் வாங்கு சக்தியை ஒப்பிட்டு பார்த்தால், ஒரு டாலர் விலை அன்னியச்செலாவணியில் இன்று ரூ.75.84 ஆகும்., இதற்கு இந்தியாவில் நாம் அதிகம் வாங்க முடியும் ஆனால் ஒரு டாலரில் அமெரிக்காவில் அதிகம் வாங்கி விட முடியாது. உதாரணமாக அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் ஒரு கிலோ உருளைக்கிழங்கு விலை 1.94 டாலர்களாகும். இதை நாமினல் எக்ஸ்சேஞ்ச் ரேட்டில் மாற்றினால் ஒரு கிலோ உருளைக் கிழங்கின் விலை அங்கு ரூ.147. இதே விலைக்கு மார்ச்சில் இந்தியாவில் 7 கிலோ உருளைக்கிழங்கை வாங்க முடியும்.

அதே போல் நம் பெட்ரோல் விலையை தற்போதைய பன்னாட்டு நிதிய பிபிபி நிர்ணயத்தின் படி கணக்கிட்டால் பெட்ரோல் விலை இந்தியாவில் 5.2 டாலர்கள். அதாவது அமெரிக்காவில் 5.2 டாலர்களுக்கு சிலபல பொருட்களை வாங்க முடியும் என்றால் நாம் இங்கு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கே இதனை கொடுத்து விடுகிறோம், இது நம் நாட்டு ஜிடிபி, தனிமனித சராசரி வருமானம், விலைவாசி உள்ளிட்ட அளவுகோல்களைக் கொண்டு கணக்கிடப்படுவது.

இதே பிபிபி கணக்கீட்டின் படி ஒரு லிட்டர் எல்.பி.ஜி. விலை 3.5 டாலர் அளவுக்கு நாம் கொடுக்கிறோம் இது உலகிலேயே அதிகம் என்கிறது இந்த ஆய்வு. அதாவது 3.5 சர்வதேச டாலருக்கு என்னெவெல்லாம் வாங்க முடியுமோ அதை நாம் இங்கு ஒரே பொருள் எல்பிஜிக்கே கொடுத்து விடுகிறோம் என்று பொருள்.
Published by:Muthukumar
First published:

Tags: LPG Cylinder, Petrol Diesel Price hike

அடுத்த செய்தி