Home /News /business /

பெட்ரோல், டீசல் விலை ரூ.10 வரை அதிகரிக்க வாய்ப்பு! ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்

பெட்ரோல், டீசல் விலை ரூ.10 வரை அதிகரிக்க வாய்ப்பு! ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்

பெட்ரோல் டீசல் கச்சா எண்ணெய்

பெட்ரோல் டீசல் கச்சா எண்ணெய்

petrol diesel crude oil : ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை 10 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருப்பதால், ஒரு லிட்டர் டீசலில், எண்ணெய் நிறுவனங்களுக்கு எவ்வளவு நஷ்டம் எற்படுகிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், கூடிய விரையில், இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 ரூபாயேனும் குறுகிய காலத்தில் அதிகரிக்கும் என்ற கணிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் ரஷ்யா - உக்ரைன் இடையே நடைபெறும் போர் தான் என்றாலும், இதன் தாக்கமாக, கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவிற்கு அதிகரித்து வருகிறது.

கச்சா எண்ணெய்யை பொறுத்தவரை, இந்தியாவின் குறைந்தபட்ச தேவை என்பது நாள் ஒன்றிற்கு 35 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்.

இதையும் படிங்க.. PM-KISAN :விவசாயிகளுக்கு 11வது தவணை இந்த நாளில் கிடைக்கும்!

இதில், ஈராக்கிடம் இருந்து 8 லட்சத்து 67 ஆயிரத்து 500 பேரலும், நைஜீரியாவிடம் இருந்து 4 லட்சத்து 72 ஆயிரத்து 300 பேரலும், சவுதி அரேபியாவிடம் இருந்து 4 லட்சத்து 45 ஆயிரத்து 200 பேரல் கச்சா எண்ணெய்யும், ஒரு நாளைய தேவைக்கு இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்த நாடுகளுடன் சேர்த்து அமெரிக்காவிடம் இருந்தும் சுமார் 5 லட்சத்து 45 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய்யும் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில், ஈராக், நைஜீரியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள், ஒபெக் கூட்டமைப்பில் இருக்கின்றன. ஓபெக் கூட்டமைப்பின் விலை பட்டியல் படி, இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் 114 டாலர். இது கடந்த 2 வாரத்தில் 24 சதவிதம் விலை உயர்வு.

இதையும் படிங்க.. ஏப்ரல் 4 முதல் ரூல்ஸ் மாறுது.. பஞ்சாப் நேஷனல் வங்கி சொன்ன அதிர்ச்சி தகவல்!

அதாவது, பிப்ரவரி 18ம் தேதி ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 92 டாலர் இது பிப்ரவரி 24ம் தேதி 101 டாலராக அதிகரித்து, பின்னர், 28ம் தேதி 99 டாலராக குறைந்தது. அதன் பின்னர், மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கச்சா எண்ணெய் விலை மார்ச் 1ம் தேதி 104 டாலர் என்ற நிலையிலும், மார்ச் 4ம் தேதி 114 டாலர் என்ற நிலையிலும் இருக்கிறது.

இந்த அளவிற்கு கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் உள்ளது. பொதுவாக, கச்சா எண்ணெய் ஏற்ற இறக்கத்தில் ஏற்படும் நஷ்டத்தை குறைக்க, ஒரு லிட்டர் டீசலுக்கு 2 ரூபாய் 50 காசுகளை கூடுதல் மார்ஜின் வைத்து விற்கப்படும். ஆனால் தற்போது, இந்த மார்ஜின் தொகையை கடந்து, ஒரு லிட்டர் டீசலுக்கு 5 ரூபாய் 70 காசுகள் நஷ்டமடைவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், குறுகிய காலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் விலை 10 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி வருகின்றன.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Sreeja
First published:

Tags: One liter petrol, Petrol Diesel Price, Petrol Diesel Price hike

அடுத்த செய்தி