அடிப்படை விலை ரூ.31, விற்பனை விலை ரூ.91... பெட்ரோல் விலை அதிகரிப்பு ஏன்?

அடிப்படை விலை ரூ.31, விற்பனை விலை ரூ.91... பெட்ரோல் விலை அதிகரிப்பு ஏன்?

மாதிரி படம்

32 ரூபாய் 28 காசுகள் அடிப்படை விலையாக கொண்ட பெட்ரோலுக்கு, 32 ரூபாய் 90 காசுகள் கலால் வரியாக விதிக்கப்படுகிறது.

 • Share this:
  32 ரூபாய் அடிப்படை விலையாக கொண்ட பெட்ரோல், தமிழகத்தில் 91 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...எவ்வாறு அதிகரிக்கிறது எரிபொருள் விலை?

  இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களுரூ, ஐதராபாத், கொச்சி, நொய்டா ஆகிய பகுதிகளில், பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

  இந்தநிலையில் தமிழகத்தில் விற்பனை சந்தைக்கு வரும்போது, ஒரு லிட்டர் பெட்ரோலின் அடிப்படை விலை 32 ரூபாய் 28 காசுகளாக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு வரிகள் காரணமாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும்போது அதன் விலை 91 ரூபாய் 70 காசுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது

  அதன்படி 32 ரூபாய் 28 காசுகள் அடிப்படை விலையாக கொண்ட பெட்ரோலுக்கு, 32 ரூபாய் 90 காசுகள் கலால் வரியாக விதிக்கப்படுகிறது. வாட் எனப்படும் மதிப்புக் கூட்டு வரி 22 ரூபாய் 84 காசுகள் விதிக்கப்படும் சூழலில், வியாபாரிகளுக்கான கமிஷன் தொகையாக மூன்று ரூபாய் 39 காசுகளும், சரக்கு கட்டணமாக 29 காசுகளும் விதிக்கப்படுகின்றன. இதனால் மொத்த வரியாக 55 ரூபாய் 74 காசுகள் வசூலிக்கப்படுகிறது.

  இதேபோல 33 ரூபாய் 80 காசுகள் அடிப்படை விலையாக கொண்ட டீசலுக்கு, 31 ரூபாய் 80 காசுகள் கலால் வரியாக விதிக்கப்படுகிறது வாட் வரியாக 16 ரூபாய் 87 காசுகளும், வியாபாரிகளுக்கான கமிஷன் தொகையாக இரண்டு ரூபாய் 21 காசுகளும், சரக்கு கட்டணமாக 29 காசுகளும் விதிக்கப்படுகின்றன. இதனால் டீசலுக்கு மொத்தமாக 48 ரூபாய் 67 காசுகள் வரியாக தமிழக அரசால் விதிக்கப்படுகிறது.

  பெட்ரோல் மற்றும் டீசல் வரிவிதிப்புகள் மூலமாக தமிழகத்துக்கு 13000 கோடி ரூபாய் வருவாயாக கிடைக்கப்பெறுகிறது
  Published by:Vijay R
  First published: