ஹோம் /நியூஸ் /வணிகம் /

கச்சா எண்ணெய் விலை சரிவு- பெட்ரோல் டீசல் விலை குறையுமா?

கச்சா எண்ணெய் விலை சரிவு- பெட்ரோல் டீசல் விலை குறையுமா?

பெட்ரோல்-டீசல் விலை

பெட்ரோல்-டீசல் விலை

சர்வதேச எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. பீப்பாய் ஒன்றின் விலை 120 டாலரில் இருந்து 90 டாலராக குறைந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • chennai |

கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் குறைந்து வருவதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா தனது எரிபொருள் தேவையில் 85 சதவீதம் அளவுக்கு வெளிநாடுகளில் இருந்து  இறக்குமதி செய்வதால் சர்வதேச எண்ணெய் சந்தையில் ஏற்படும் விலை மாற்றம்  இந்திய எரிபொருள் சந்தையில் உடனடியாக  எதிரொலிக்கும். பெருமளவு எண்ணெய்யை ஈராக், அரேபியா, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்குகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக சர்வதேச எண்ணெய் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. பீப்பாய் ஒன்றின் விலை 120 டாலரில் இருந்து 90 டாலராக குறைந்தது.

இதையும் படிங்க:திருமணமான பெண்களே... உங்கள் ஆதார் கார்டில் அப்பா பெயருக்கு பதில் கணவர் பெயரை மாற்ற வேண்டுமா..? ஈஸியா செய்ய இதோ வழி

கடந்த ஒரு வாரமாக 90 டாலருக்கு விற்பனை செய்யப்படும் சூழலில் இந்த விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்படலாம் என்று தெரிகிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான முடிவு ஒரு வாரத்திற்குள் எடுக்கப்படலாம் எனவும் தெரிகிறது. கடந்த முறை கலால் வரி குறைக்கப்பட்டதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மத்திய அரசு விரைவில் செய்தி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முந்தைய ஒருசில காலங்களில் உலக சந்தையில் விலை குறைந்த போதும் இங்கு விலை குறைக்கபடாமலும் இருந்துள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு  வரும் வரை காத்திருப்போம்.

First published:

Tags: Petrol Diesel Price