• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Petrol Diesel Price Today :₹100ஐ கடந்து அதிர்ச்சி அளிக்கும் பெட்ரோல் விலை.. சென்னையில் என்ன விலை தெரியுமா?

Petrol Diesel Price Today :₹100ஐ கடந்து அதிர்ச்சி அளிக்கும் பெட்ரோல் விலை.. சென்னையில் என்ன விலை தெரியுமா?

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.106.08 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.  மத்திய பிரதேசத்தின்  ரெவா மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.38 பைசாவுக்கு  விற்பனை  செய்யப்படுகிறது

  • Share this:
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மும்பையில் புதிய உச்சமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101ஐ தாண்டியுள்ளது.

பொதுத்துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, கடந்த மே மாதத்தில் மட்டும்  19 முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனிடையே மாநிலங்களின் வரிவிதிப்பு காரணமாக ஒவ்வொறு மாநிலங்களிலும்  பெட்ரோல் , டீசல் விலையில் வித்தியாசம் காணப்படுகிறது.  இதன் காரணமாக ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மட்டுமல்லாது தென் மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா போன்றவற்றிலும் பெட்ரோல் விலை ரூ.100 ஐ கடந்துள்ளது.

மேலும் படிக்க.. தென்னிந்திய மாநிலங்களில் ரூ.100ஐ கடந்த பெட்ரோல் விலை..

பிற நகரங்களைக் காட்டிலும் மும்பையில் எரிபொருள் விலை மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்ரேசன்  நிறுவனம் பெட்ரோல் விலையில் இன்று 27 பைசா உயர்த்தியுள்ளது.  உள்ளூர் வரிகளுடன் சேர்த்து மும்பை நகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 101 ரூபாயை கடந்துள்ளது. இன்றைய நிலவரப்படி அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.25 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டுகிறது.  டீசல் விலை  31 பைசா உயர்ந்து  லிட்டருக்கு ரூ.93.30 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.106.08 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.  மத்திய பிரதேசத்தின்  ரெவா மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.38 பைசாவுக்கு  விற்பனை  செய்யப்படுகிறது.

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.95.03 பைசாவுக்கும் டீசல் ரூ.85.95 பைசாவுக்கும்  சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.96.47 பைசாவுக்கும் டீசல் ரூ.90.66 பைசாவுக்கும் கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.95.02 பைசாவுக்கும் டீசல் ரூ.88.80 பைசாவுக்கும்  பெங்களூருவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.20 பைசாவுக்கும் டீசல் ரூ.91.12 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: