ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஒரு மாதமாக ஒரே விலையில் விற்பனையாகும் பெட்ரோல், டீசல்!

ஒரு மாதமாக ஒரே விலையில் விற்பனையாகும் பெட்ரோல், டீசல்!

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் இன்று பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், மத்திய அரசு கடந்த மாதம் 3ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் குறைத்தது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை கட்டுக்குள் இருந்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயம் செய்யும் முறை இருந்து வரும் நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 101.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல, டீசல் விலையும் நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு ரூ.91.43 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Must Read : ஒமைக்ரான் தொற்று : தமிழக எல்லைகளில் தீவிர கண்காணிப்பு

ஒரு மாத காலத்திற்கு மேலாக, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

First published:

Tags: Petrol, Petrol Diesel Price