• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்... காரணம் என்ன?

பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்... காரணம் என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

ஏப்ரல் மாதத்திலும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கப் போவதில்லை என்று எண்ணெய் உற்பத்தி செய்யும் ஒபேக் பிளஸ் நாடுகள் முடிவெடுத்துள்ளன.

  • Share this:
    கொரோனா நெருக்கடிக்கு பின்னர் இந்தியாவின் பொருளாதாரம் மீட்சி பாதைக்கு திரும்பி வருவதால் பெட்ரோல், டீசல் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கொரோனா பரவலுக்கு முந்தைய நிலைக்கு கச்சா எண்ணெய் தேவை அதிகரித்துள்ளதாகவும், ஆனால், அதற்கேற்ப கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒபேக் பிளஸ் நாடுகள் அதிகரிக்கவில்லை என்றும் கூறினார்.

    2021ம் ஆண்டு தொடக்கத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி இயல்பு நிலைக்கு திரும்பும் என்று ஒபெக் பிளஸ் கூட்டமைப்பு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு மத்தியில் சவுதி அரேபியா தலைமையிலான ஒபேக் பிளஸ் நாடுகளின் இணையவழி கூட்டம் நடைபெற்றது. அப்போது, உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பொருளாதார மந்த நிலையை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதத்திலும் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கப் போவதில்லை என்று முடிவெடுத்தன.

    மேலும் படிக்க... 30 ஆண்டுக்கால கோரிக்கை நிறைவேற்றம்...100 சதவீதம் வாக்களிக்க காத்திருக்கும் மலைக் கிராம மக்கள்

    இதன்காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பில்லை என்று தெரிகிறது. மேலும் விலை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: