Home /News /business /

பெட்ரோல், டீசல் இன்றைய (டிசம்பர் 8,2021) விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் இன்றைய (டிசம்பர் 8,2021) விலை நிலவரம்

பெட்ரோல்-டீசல்

பெட்ரோல்-டீசல்

சென்னையில் இன்றும் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த மாதம் 3ஆம் தேதி மத்திய அரசு, பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் குறைத்து அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை கட்டுக்குள் இருந்து வருகிறது.

    எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் முறை இருந்து வரும் நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 101.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல டீசல் விலையும் நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு ரூ.91.43 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இன்றி அதேவிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    ஒரு மாத காலத்திற்கு மேலாக, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.

    Must Read : தக்காளி விலை அண்டை மாநிலங்களிலும் கிடுகிடு உயர்வு : இன்றைய விலை நிலவரம்

    34-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price

    அடுத்த செய்தி