Home /News /business /

டிசம்பர் 7 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

டிசம்பர் 7 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் இன்றும் பெட்ரோல் விலை, நேற்றைய விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

    பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், மத்திய அரசு கடந்த மாதம் 3ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் குறைத்து அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல் டீசல் விலை கட்டுக்குள் இருந்து வருகிறது.

    பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் நிர்ணயம் செய்யும் முறை இருந்து வரும் நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 101.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    டீசல் விலையும் இதேபோல, நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு ரூ.91.43 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, 33ஆவது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இன்றி அதேவிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    Must Read : இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும் என கணிப்பு

    ஒரு மாத காலத்திற்கு மேலாக, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price

    அடுத்த செய்தி