Home /News /business /

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (டிசம்பர் 03)

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (டிசம்பர் 03)

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் இன்றி, நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.

    பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், மத்திய அரசு கடந்த மாதம் 3ம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் குறைத்தது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை கட்டுக்குள் இருந்து வருகிறது.

    எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்யும் முறை இருந்து வரும் நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 101.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதேபோல, டீசல் விலையும் நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு ரூ.91.43 என்ற விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, 30ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    Must Read : ஐய்யப்ப பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு 64 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price

    அடுத்த செய்தி