• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Petrol-Diesel Price : சென்னையில் ரூ.90ஐ நெருங்கும் பெட்ரோல் விலை...

Petrol-Diesel Price : சென்னையில் ரூ.90ஐ நெருங்கும் பெட்ரோல் விலை...

பெட்ரோல் நிலையம்

பெட்ரோல் நிலையம்

சென்னையில் பெட்ரோல் விலை 90 ரூபாயை எட்டியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

  • Share this:
    தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 90 ரூபாயை நெருங்கியது. சென்னையில் 26 காசு அதிகரித்து 89 ரூபாய் 96 காசுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 24 காசு உயர்ந்து 82 ரூபாய் 90 காசாக அதிகரித்துள்ளது. கடந்த இரு மாதங்களில் பெட்ரோல் விலை 3 ரூபாய்க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்து, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 26 காசுகள் உயர்ந்து, 89 ரூபாய் 96 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து, 82 ரூபாய் 90 காசுகளுக்கும் விற்பனையானது. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை வாகன ஓட்டிகளை கலக்கம் அடைய செய்துள்ள நிலையில், விரைவில் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    பெட்ரோல் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டிவருவதால் அத்தியாவசிப் பொருட்கள் விலை மேலும் அதிகரிக்கும் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். வாடகையை உயர்த்த முடியாமல் நஷ்டத்தில் வாகனங்களை இயக்குவதாக ஓட்டுநர்கள் கூறுகின்றனர்.



    ஒரு லிட்டர் பெட்ரோல் 90 ரூபாயை எட்டியுள்ளதால், தினசரி கிடைக்கும் வருவாயில் 20 சதவீதத்தை பெட்ரோலுக்காக செலவிட நேரிடுவதாக தொழிலாளர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

    டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப வாடகையை அதிகரிக்க முடியவில்லை என்று டாக்சி ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். மீறி வாடகையை உயர்த்தினால் மக்கள் டாக்சி, ஆட்டோவில் பயணிப்பதை தவிர்ப்பதாகவும் கூறுகின்றனர்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை அரசு தான் கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெட்ரோல் விலை புதிய உச்சத்தை எட்டிய நிலையில், விரைவில் 100 ரூபாயை கடந்தாலும் ஆச்சரியமில்லை என்று வாகன ஓட்டுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    மேலும் படிக்க... 18-ஆம் நூற்றாண்டின் சிந்தனையுடன், 21-ஆம் நூற்றாண்டின் வேளாண் சவால்களை சந்திக்க முடியாது - பிரதமர் மோடி

     

    இதனால், வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வதைத் தவிர்க்க முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: