சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி, மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் குறைத்து அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 3 மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருகிறது. அதன்படி, 115 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40 ஆகவும், டீசல் ரூ.91.43 ஆகவும் மாற்றமின்றி அதே விலை நீடிக்கிறது.
எனினும், உக்ரைன்-ரஷியா இடையேயான போர் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 120 அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்ந்தது. இதனால், பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது.
நகரம் |
பெட்ரோல் |
டீசல் |
Delhi |
95.41 |
86.67 |
Mumbai |
109.98 |
94.14 |
Chennai |
101.40 |
91.43 |
Kolkata |
104.67 |
89.79 |
Source: Indian Oil |
இந்நிலையில், பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. ஆனால், இந்த தேர்தல் முடிந்த பின்னர் எரிபொருட்களின் விலை உயர்த்தப்படும் என்று சொல்லப்படுவதால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
Must Read : மு.க.ஸ்டாலினின் உங்களில் ஒருவன் சுயசரிதை: ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்
எனினும் தற்போது பெட்ரோல், டீசல் விலை கட்டுக்குள் இருந்து வருவதால் வாகன ஓட்டிகள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
மாவட்டங்களில் பெட்ரோல் விலை நிலவரம்:
சென்னை - ரூ.101.40
மதுரை - ரூ.101.98
கோவை - ரூ.101.97
திருச்சி - ரூ.102.20
சேலம் - ரூ.102.46
கன்னியாகுமரி - ரூ.102.35
அரியலூர் - ரூ.102.41
கடலூர் - ரூ.103.86
தருமபுரி - ரூ.102.98
திண்டுக்கல் - ரூ.102.47
ஈரோடு - ரூ.102.04
காஞ்சிபுரம் - ரூ.101.89
கரூர் - ரூ.101.90
கிருஷ்ணகிரி - ரூ.103.43
நாகப்பட்டினம் - ரூ.102.88
நாமக்கல் - ரூ.102.04
நீலகிரி - ரூ.103.61
பெரம்பலூர் - ரூ.102.32
புதுக்கோட்டை - ரூ.102.97
ராமநாதபுரம் - ரூ.102.53
சிவகங்கை - ரூ.102.78
தேனி - ரூ.102.69
தஞ்சாவூர் - ரூ.102.44
திருவாரூர் - ரூ.102.36
திருநெல்வேலி - ரூ.101.71
திருப்பூர் - ரூ.101.95
திருவள்ளூர் - ரூ.101.58
திருவண்ணாமலை - ரூ.102.74
தூத்துக்குடி - ரூ.101.73
வேலூர் - ரூ.102.76
விழுப்புரம் - ரூ.103.19
விருதுநகர் - ரூ.102.46
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.