2017ம் ஆண்டு முதல், தினசரி விலை நிர்ணயம் அமல்படுத்தப்பட்ட பின்னர், பெட்ரோல், டீசலின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்துவருகிறது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இந்தியச் சந்தையில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில், 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், வரலாற்று உச்சமாக 87 ரூபாய்க்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல், அதன்பின்னர் படிப்படியாக சரியத் தொடங்கியது. ஆனால் தற்போது மீண்டும் எரிபொருள் விலை உயரத் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7-ந்தேதிக்கு பிறகு விலை மாற்றம் இல்லாமல் (86 ரூபாய் 51 காசு) காணப்பட்டு வந்த பெட்ரோல் விலை,நேற்று முன்தினம் முதல் மீண்டும் விலை உயரத் தொடங்கியுள்ளது. நேற்று 86 ரூபாய் 96 காசுகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையானது. டீசலும் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்து, 79 ரூபாய் 72 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை இருப்பதால், மீண்டும் புதிய உச்சத்தை தொடும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் படிக்க...
Srirangam | ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அறிந்ததும், அறியாததும்
இந்நிலையில், பெட்ரோல் விலை இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. கடந்த சில தினங்களாக ஏறுமுகத்தில் இருந்த பெட்ரோல், டீசல் விலை இன்று மட்டும் உயரவில்லை. இதனால் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை மீண்டும் தொடும் எனத்தெரிகிறது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்