• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பெட்ரோல், டீசல் விலை இன்றைய (அக்டோபர் 26) நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை இன்றைய (அக்டோபர் 26) நிலவரம்

பெட்ரோல்

பெட்ரோல்

சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இன்றி நேற்றைய விலையிலே விற்பனை செய்யப்படுகிறது.

  • Share this:
    பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரத் தொடங்கி இருப்பது மக்களிடையே அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வரும் நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலை நிலவரம் சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை நிலவரம், இந்தியாவில் எதிரொலித்து வருகிறது. அதன்படி, சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்-டீசலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, தினந்தோறும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

    கொரோனா பாதிப்புகளில் இருந்து உலக மக்கள் படிப்படியாக மீண்டு வரும் நிலையில், பெட்ரோல்-டீசலுக்கான பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய்க்கான தேவையும் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் தேவை அதிகரிப்பு மற்றும் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் உள்ளன, கணிசமான அளவுக்கு உற்பத்தியை பெரும்பாலான நாடுகள் அதிகரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்கா தனது எண்ணெய் வினியோகத்தை குறைத்துக் கொண்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பீப்பாய் ஒன்றுக்கு 85 டாலர் என்ற நிலையை கடந்த வாரம் எட்டியது. இது கடந்த 2018ஆம் ஆண்டுக்கு பின் மிகவும் அதிகமாகும். இதனால், கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அத்துடன், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீது மத்திய-மாநில அரசுகள் அதிக அளவில் வரியும் விதித்துள்ளன. இதுவும் பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளன. பெட்ரோல் விலை நாட்டின் அனைத்து பெரிய நகரங்களிலும் ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலையும் பல நகரங்களில் ரூ.100-ஐ கடந்துள்ளது.

    Must Read : தொடங்கியது வடகிழக்கு பருவமழை : இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இன்றி நேற்றைய விலையிலே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 104.52 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 100.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: