பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றி அமைக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை தினசரி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில்,
சென்னையில் விலை அதிகரித்துள்ளது.
தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர். எரி பொருட்களின் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று, தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், தமிழக பட்ஜெட் அறிவிப்பில் பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது.
இந்த விலை குறைப்பு அமல்படுத்தப்பட்டதால் சற்றே நிம்மதி அடைந்திருந்த நிலையில், பெட்ரோல் விலை 100 ரூபாயை தொடும் நிலையில் முன்னேறி வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 99.15 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 94.17 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 21 காசுகள் உயர்ந்து ரூ.99.36 க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.94.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Must Read : ஊரக உள்ளாட்சித் தேர்தல் : பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்த உத்தரவு
இந்நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.