• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரிப்பு : இன்றைய (அக்டோபர் 1) விலை நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை இன்றும் அதிகரிப்பு : இன்றைய (அக்டோபர் 1) விலை நிலவரம்

பெட்ரோல்

பெட்ரோல்

பெட்ரோல் விலை 100 ரூபாயை தொடும் நிலையில் விலை அதிகரித்து வருகிறது.

  • Share this:
    பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றி அமைக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறன. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்றும் பொட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். எரி பொருட்களின் விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என, பல்வேறு தரபினரும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், தமிழக பட்ஜெட்டில் பெட்ரொல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

    இந்த விலை குறைப்பால், சற்றே ஆறுதல் அடைந்திருந்த நிலையில், பெட்ரோல் விலை 100 ரூபாயை தொடும் நிலையில் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டர் 99.15 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 94.17 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 21 காசுகள் உயர்ந்து ரூ.99.36 க்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.94.45க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து ரூ.99.58-க்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசலின் விலை 29 காசுகள் அதிகரித்து ரூ.94.74க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    Must Read : அக்டோபர் மாதத்தில் 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை! வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

    பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இவற்றின் விலையைக் குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: