சென்னையில் இன்றைய (செப்டம்பர் 3) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் பங்க்

சென்னையில் 2ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.

 • Share this:
  சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அதன்படி, சென்னையில் இன்று (செப்டம்பர் 3) பெட்ரோல் லிட்டர் 99.08 ரூபாய், டீசல் லிட்டர் 93.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

  நாடு முழுதும், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

  தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னையில் 2ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

  நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின், புதிய கட்டணங்கள் காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருகின்றது. கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை (Petrol, Diesel Price) தொடர்ந்து உச்சத்தைத் தொட்டன. இதனால், இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

  Must Read : குழந்தைகளுக்கு கொரோனா... பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை - மருத்துவர்கள் தகவல்

  பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயைக் கடந்தும் தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருகின்றது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: