• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • கொரோனா காலத்திலும் உயரும் பெட்ரோல், டீசல் விலை...!

கொரோனா காலத்திலும் உயரும் பெட்ரோல், டீசல் விலை...!

பெட்ரோல், டீசல்

பெட்ரோல், டீசல்

இந்தியாவை பொறுத்தவரை, மார்ச் மாதத்தில், 40,00,000 பேரல் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கொரோனா ஊரடங்கு காலத்திலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றன.

    கொரோனா காலத்தில் மக்களின் வாகன பயன்பாடு குறைந்து, பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைந்துள்ள போதிலும் இவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்த ஆய்வுகளை எண்ணெய் துறை சார்ந்த நிறுவனங்கள் நடத்தி உள்ளன. அதில், 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பெட்ரோல், டீசல் விற்பனை சற்று அதிகமாகவே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு சரக்குகளை கொண்டு செல்வதில் பெரிய சிக்கல் இல்லை என்ற நிலை தான் உள்ளது என்றாலும், சில மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன. இது மாநிலங்களுக்கு உள்ளே பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் இந்தியா முழுவதிலும், சுமார் 65 சதவித சரக்கு வாகனங்கள், இயக்கப்படாமல் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also read... Petrol-Diesel Price | பெட்ரோல், டீசல் விலை கடந்த 3 வாரங்களில் எவ்வளவு உயர்ந்திருக்கிறது தெரியுமா?

    பயன்பாடு குறைந்துள்ள நிலையிலும், இந்திய எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்கள் சுத்தீகரிப்பு கட்டணத்தை குறைக்கவில்லை. கச்சா எண்ணெய் இருப்பு குறைவாக உள்ளதாலும், கச்சா எண்ணெய்யை சுத்தீகரிப்பு செய்து ஏற்றுமதி செய்ய வாய்ப்புகள் குறைவாக இருக்கும் நிலையில், உள்நாட்டிலும், பயன்பாடு குறைந்துள்ளது.

    இதனால் எண்ணெய் சுத்தீகரிப்பு செய்யும் அளவுகள் குறைக்கப்பட்டுள்ளன. அளவுகள் குறைந்தாலும், சுத்தீகரிப்பு செய்யும் செலவுகளில் மாற்றம் இல்லை என்பதே தற்போதிய நிலையாக இருப்பதாக கூறுகின்றனர். சுத்தீகரிப்பு செலவுகள் இந்த ஆண்டு முழுவதும் குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று இந்தியா எண்ணெய் சுத்தீகரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவை பொறுத்தவரை, மார்ச் மாதத்தில், 40,00,000 பேரல் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அது மே மாதம் 7,30,000 பேரலாக குறைந்துள்ளது. இந்த அளவிற்கு பயன்பாடு குறைந்து இருந்தாலும், சுத்தீகரிப்பு செலவில் மாற்றம் இல்லாததாலும், இனி வரும் காலங்களில், ஊரடங்கு தளர்த்தப்படும் போது, தேவை உடனடியாக அதிகரிக்கும் என்பதாலும் பெட்ரோல், டீசல் விலையில் அடுத்த ஓராண்டிற்கு நிலையற்ற தன்மையே இருக்கும் என்றும் பெரும்பாலும், அவற்றின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: