• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Petrol-Diesel Price | குறைந்தது பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

Petrol-Diesel Price | குறைந்தது பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம் என்ன?

பெட்ரோல் விற்பனை நிலையம்

பெட்ரோல் விற்பனை நிலையம்

சென்னையில் 24 நாட்களுக்கு பின் இன்று பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருக்கிறது.

  • Share this:
    பொதுத்துறையைச் சேர்ந்த, பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்கள், சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் கடந்த 24 நாட்களாக பெட்ரோல் லிட்டர் 93.11 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 86.45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் 25-வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருக்கிறது.

    சென்னையில் பெட்ரோல், லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து, 92.95 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து 86.29 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

    டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .90.99 ஆகவும், டீசல் ரூ.81.30 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில், பெட்ரோல் விலை இன்று ரூ.97.40 ஆகவும், டீசல் விலை ரூ.88.42 ஆகவும் உள்ளது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்ணயித்ததுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: