• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • பெட்ரோல், டீசல் விலை இன்றைய (அக்டோபர் 25) நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை இன்றைய (அக்டோபர் 25) நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் விலை நாட்டின் அனைத்து பெரிய நகரங்களிலும் ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையும் பல நகரங்களில் ரூ.100-ஐ கடந்துள்ளது.

  • Share this:
    பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கி இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தி வரும் நிலையில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெயின் விலை நிலவரம் இந்தியாவில் எதிரொலித்து வருகிறது. அதன்படி, சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்-டீசலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, நாள்தோறும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

    உலக நாடுகள், கொரோனா பாதிப்புகளில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் நிலையில், பெட்ரோல்-டீசலுக்கான பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், கச்சா எண்ணெய்க்கான தேவை தற்போது அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் தேவை அதிகரிப்பு மற்றும் விலை உயர்வு போன்ற காரணங்கள் இருந்தபோதும், கணிசமான அளவுக்கு உற்பத்தியை பெரும்பாலான நாடுகள் அதிகரிக்கவில்லை.

    இதற்கிடையில், அமெரிக்கா தனது எண்ணெய் வினியோகத்தை குறைத்துக்கொண்டுள்ளது. இந்த காரணிகளால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பீப்பாய் ஒன்றுக்கு 85 டாலர் என்ற நிலையை கடந்த வாரம் எட்டியது. இது கடந்த 2018ஆம் ஆண்டுக்கு பின் மிகவும் அதிகம் ஆகும். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    மற்றொரு ஒருபுறம், இந்தியாவில் பெட்ரோல், டீசல் மீது மத்திய-மாநில அரசுகள் அதிக அளவில் வரியும் விதித்து உள்ளன. இதுவும் பெட்ரோல்-டீசல் விலையை புதிய உச்சத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் விலை நாட்டின் அனைத்து பெரிய நகரங்களிலும் ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையும் பல நகரங்களில் ரூ.100-ஐ கடந்துள்ளது.

    இந்நிலையில், இந்தியாவில் தொடர்ந்து 5ஆவது நாளாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது, அதன்படி, டெல்லியில் இதுவரை இல்லாத அளவாக பெட்ரோல் விலை ரூ.107.59 ஆக இருந்தது. மும்பையில் ரூ.113.46 ஆகவும், சென்னையில் 104.52 ரூபாயாகவும், கொல்கத்தாவில் ரூ.108.11 ஆகவும் விற்கப்பட்டது. இதைப்போல டீசல் விலை டெல்லியில் ரூ.96.32 ஆகவும், மும்பையில் ரூ.104.38 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.99.43 ஆகவும், சென்னையில் ரூ.100.59 ஆகவும் உச்சத்தில் இருந்தது.

    Must Read : 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருட்டு: பெண்களுடன் உல்லாசம்- சொகுசு வாழ்க்கை வாழ்ந்த திருடன் கைது

    இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி, நேற்றைய விலையிலே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 104.52 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 100.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: