முகப்பு /செய்தி /வணிகம் / 123வது நாளாக பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இல்லை - வாகன ஓட்டிகள் நிம்மதி

123வது நாளாக பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இல்லை - வாகன ஓட்டிகள் நிம்மதி

பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

Petrol Diesel Price Today : சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 123-வது நாளாக இன்றும் (செப்டம்பர் 21, 2022) மாற்றம் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 123வது நாளாக அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. தமிழகத்தில், 2021 நவம்வர் 3ஆம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது பெட்ரோல், டீசல் விற்பனையில் உச்சவிலையாக இருந்தது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கலக்கம் அடைந்தனர். அதனைத் தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கத் தொடங்கின.

இந்நிலையில், 2022 மே21 ஆம் தேதி, மத்திய அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னையில் மே 22ஆம் தேதி முதல் பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ALSO READ | பள்ளி கழிவறையில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை - கோவில்பட்டியில் அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய்யில் 85 சதவீதம் இறக்குமதியை நம்பியே இருக்கும் நிலையில், உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய்யை வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளதால், ரஷ்யா இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மலிவு விலையில் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்து வருகிறது.

இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து அதிகபடியான கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. இந்நிலையில், ரஷ்யா கச்சா எண்ணெய் 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு விற்பனை செய்கிறது. டாலர் இல்லாமல் ரூபிள், ரூபாய் மதிப்பில் இதற்கான பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதனால் மலிவு விலையில் கச்சா எண்ணெய் கிடைத்து வருகிறது.

இந்நிலையில், தொடர்ந்து 123-வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை கட்டுக்குள் இருந்து வருகின்றன. அதன்படி, இன்று சென்னையில், பெட்ரோல் 102.63 ரூபாய், டீசல் 94.24 ரூபாய் என விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

top videos

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    First published:

    Tags: Petrol Diesel Price, Petrol-diesel