Home /News /business /

39ஆவது நாளாக பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இல்லை - பொதுமக்கள் நிம்மதி

39ஆவது நாளாக பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இல்லை - பொதுமக்கள் நிம்மதி

பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

Petrol Diesel Price Today : சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 39ஆவது நாளாக இன்றும் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த சில மாதங்களாக தங்கம், கச்சா எண்ணெய் போன்றவற்றின் விலை உலகம் முழுவதும கடுமையாக உயர்ந்துள்ளன. உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறுத்துள்ளன. இதனால், ரஷ்யா மலிவு விலையில் கச்சா எண்ணெய்யை பிற நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது.

    இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து அதிகபடியான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில், கச்சா எண்ணெய் 35 டாலர்கள் தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு ரஷ்யா விற்பனை செய்கிறது. டாலர் இல்லாமல் ரூபிள், ரூபாய் மதிப்பில் இதற்கான பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதனால் மலிவு விலையில் கச்சா எண்ணெய் கிடைத்து வருகிறது.

    அதன்படி, மே மாதத்தில் இந்தியாவுக்கு மிக அதிக அளவு கச்சா எண்ணெய் விற்பனை செய்த நாடுகளின் வரிசையில் ரஷ்யா 2ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுவரை இரண்டாமிடத்தில் இருந்த சவூதி அரேபியா தற்போது 3ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதலிடத்தில் தொடர்கிறது அமெரிக்கா. இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெய்யில் 85 சதவீதம் இறக்குமதியை நம்பியே உள்ளன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தியாவில் தினசரி விலை நிர்ணய முறை அமலுக்கு வந்தது முதலே எரிபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தன. அற்கேற்ப அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கின. எரிபொருட்களின் விலை உயர்வை காரணம் காட்டி, கடந்த சில மாதங்களாக அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரித்துள்ளன.

    Must Read : நரிக்குறவர் இனமக்கள் இருக்கையில் அமரக்கூடாது என்று யாரும் கூறவில்லை - சிவகங்கை மாவட்ட ஆட்சியா் விளக்கம்

    இதற்கிடையில், மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தது, அதனைத் தொடர்ந்து 39ஆவது நாளாக பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இன்றி கட்டுக்குள் இருந்து வருகின்றன. அதன்படி, இன்று சென்னையில், பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி