இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.
இந்தியாவில் தினசரி விலை நிர்ணய முறை அமலுக்கு வந்தது முதலே எரிபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அற்கேற்ப அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கின. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எரிபொருட்களின் விலை உயர்வை காரணம் காட்டி, கடந்த சில மாதங்களாக அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரித்துள்ளன.
இதற்கிடையில், மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தது, அதனைத் தொடர்ந்து 38ஆவது நாளாக பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, இன்று சென்னையில், பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகின்றது.
மாவட்ட வாரியாக பெட்ரோல் விலை நிலவரம்:
சென்னை - ரூ.102.63
கோவை - ரூ.103.15
திருச்சி - ரூ.103.40
மதுரை - ரூ.103.21
சேலம் - ரூ.103.74
அரியலூர் - ரூ.103.88
கடலூர் - ரூ.105.01
தருமபுரி - ரூ.103.80
திண்டுக்கல் - ரூ.103.42
ஈரோடு - ரூ.103.17
காஞ்சிபுரம் - ரூ.103.01
கன்னியாகுமரி - ரூ.103.87
கரூர் - ரூ.103.05
கிருஷ்ணகிரி - ரூ.104.61
நாகப்பட்டினம் - ரூ.104.08
நாமக்கல் - ரூ.103.27
நீலகிரி - ரூ.104.90
பெரம்பலூர் - ரூ.103.54
புதுக்கோட்டை - ரூ.103.49
ராமநாதபுரம் - ரூ.103.47
சிவகங்கை - ரூ.103.84
தேனி - ரூ.104.08
தஞ்சாவூர் - ரூ.103.61
திருவாரூர் - ரூ.103.89
திருநெல்வேலி - ரூ.102.94
திருப்பூர் - ரூ.103.49
திருவள்ளூர் - ரூ.102.99
திருவண்ணாமலை - ரூ.104.44
தூத்துக்குடி - ரூ.103.38
வேலூர் - ரூ.104.24
விழுப்புரம் - ரூ.103.85
விருதுநகர் - ரூ.103.38
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு:
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல், டீசலுக்காக 2 கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தலைநகர் ஹைதராபாத்தில் 40 சதவீத பங்க்குகளில் ஸ்டாக் இல்லை என்று எழுதி வைக்கப்பட்டுள்ளது.
Must Read : அதிமுகவுக்கு ஒற்றை தலைமையே சரி - திருநாவுக்கரசர் கருத்து
இதேபோல கர்நாடகா மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது. டீசல் மொத்த கொள்முதல் விலை அதிகரிப்பால், அரசு பேருந்து பணிமனைகளில் உள்ள பங்க்குகளில் டீசல் ஸ்டாக் இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.