Home /News /business /

ஜூன் 27 : பெட்ரோல், டீசல் மாவட்ட வாரியாக இன்றைய விலை நிலவரம்

ஜூன் 27 : பெட்ரோல், டீசல் மாவட்ட வாரியாக இன்றைய விலை நிலவரம்

பெட்ரோல்,  டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

Petrol Diesel Price Today : சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 37ஆவது நாளாக இன்றும் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

    இந்திய எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.

    இந்தியாவில் தினசரி விலை நிர்ணய முறை அமலுக்கு வந்தது முதலே எரிபொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அற்கேற்ப அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கின. இதனால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எரிபொருட்களின் விலை உயர்வை காரணம் காட்டி, கடந்த சில மாதங்களாக அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரித்துள்ளன.

    இதற்கிடையில், மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தது, அதனைத் தொடர்ந்து 37ஆவது நாளாக பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, இன்று சென்னையில், பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    மாவட்ட வாரியாக பெட்ரோல் விலை நிலவரம்:

    சென்னை - ரூ.102.63

    கோவை - ரூ.103.15

    திருச்சி - ரூ.103.40

    மதுரை - ரூ.103.21

    சேலம் - ரூ.103.74

    அரியலூர் - ரூ.103.88

    கடலூர் - ரூ.105.01

    தருமபுரி - ரூ.103.80

    திண்டுக்கல் - ரூ.103.42

    ஈரோடு - ரூ.103.17

    காஞ்சிபுரம் - ரூ.103.01

    கன்னியாகுமரி - ரூ.103.87

    கரூர் - ரூ.103.05

    கிருஷ்ணகிரி - ரூ.104.61

    நாகப்பட்டினம் - ரூ.104.08

    நாமக்கல் - ரூ.103.27

    நீலகிரி - ரூ.104.90

    பெரம்பலூர் - ரூ.103.54

    புதுக்கோட்டை - ரூ.103.49

    ராமநாதபுரம் - ரூ.103.47

    சிவகங்கை - ரூ.103.84

    தேனி - ரூ.104.08

    தஞ்சாவூர் - ரூ.103.61

    திருவாரூர் - ரூ.103.89

    திருநெல்வேலி - ரூ.102.94

    திருப்பூர் - ரூ.103.49

    திருவள்ளூர் - ரூ.102.99

    திருவண்ணாமலை - ரூ.104.44

    தூத்துக்குடி - ரூ.103.38

    வேலூர் - ரூ.104.24

    விழுப்புரம் - ரூ.103.85

    விருதுநகர் - ரூ.103.38

    இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு :

    இந்நிலையில், இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. அங்கே பெட்ரோல் நிரப்புவதற்காக நூற்றுக்கணக்கானோர் இருசக்கர வாகனங்களுடன் குவிந்த காட்சிகள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிதவிக்கும் இலங்கையில், மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    பெட்ரோல், டீசலுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். பெட்ரோல் நிலையத்தில், இருசக்கர வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் குவிந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

    Must Read : பரபரப்பான சூழலில் சென்னையில் இன்று அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம்

    இந்நிலையில் இலங்கையில் 2 மாதங்களில் 3ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. பெட்ரோல் 50 ரூபாய் அதிகரித்து லிட்டர் ரூ.470 ஆகவும், டீசல் 60 ரூபாய் அதிகரித்து லிட்டர் ரூ.460 ஆகவும் விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol price, Petrol-diesel

    அடுத்த செய்தி