ஹோம் /நியூஸ் /வணிகம் /

பெட்ரோல், டீசல் விலை 34-வது நாளாக மாற்றமின்றி விற்பனை - பொதுமக்கள் நிம்மதி

பெட்ரோல், டீசல் விலை 34-வது நாளாக மாற்றமின்றி விற்பனை - பொதுமக்கள் நிம்மதி

பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

Petrol Diesel Price Today : சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் 34ஆவது நாளாக இன்றும் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை கடந்த மே மாதம் 21ஆம் தேதி மத்திய அரசு குறைத்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. அதன்படி, சென்னையில் லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 34ஆவது நாளாக இன்றும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் இன்று (ஜூன் 24, 2022) நேற்றையை விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலையில் மாற்றம் செய்யப்படாததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் விலைவாசி உயர்வு 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 8.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் மீதான வரிகளை 3 மாதங்களுக்கு ரத்து செய்யும்படி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜோபைடன் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது அமெரிக்காவில் பெட்ரோல் மீது லிட்டருக்கு 4.84 சென்ட், டீசல் மீது லிட்டருக்கு 6.45 சென்டும் மத்திய அரசு வரியாக விதிக்கப்படுகிறது. இவற்றை ரத்து செய்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் சுமார் 3.6% குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.

Must Read : கொரோனா பரவல் - தலைமைச் செயலகத்தில் இன்று முதல் மாஸ்க் கட்டாயம்

இதன்விளைவாக, நேற்று சர்வதேச சந்தைகளில், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 3 டாலர் சரிந்து 108 டாலராக குறைந்து தற்போது 110 டாலராக உள்ளது.

First published:

Tags: Petrol, Petrol Diesel Price, Petrol price, Petrol-diesel