சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
கடந்த மே மாதம் 21ஆம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. அதன்படி, சென்னையில் லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 33ஆவது நாளாக இன்றும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் இன்று (ஜூன் 23, 2022) நேற்றையை விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலையில் மாற்றம் செய்யப்படாததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு
இந்நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்த தனராஜ் கூறுகையில், சென்னையின் சில பகுதிகள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில், பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று தெவித்தார்.
இதன் காரணமாக வாகன ஓட்டிகள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் லாரி தொழில் முடங்கியுள்ளது எனவும் வருத்தம் தெரிவித்தார். தங்கள் சங்கம் நடத்தும் மூன்று பங்க்குகளிலும் தட்டுப்பாடு உள்ளது என்று தெரிவித்த தனராஜ் இதற்கு, எண்ணெய் நிறுவனங்கள் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஏற்கெனவே, கிரெடிட் அடிப்படையில் பெரிய பெட்ரோல் பங்க்குகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலை வழங்கின என்றும், தற்போது கடன் கிடையாது என்று கூறி முன் கூட்டியே பணம் கட்ட சொல்கின்றனர். முன் கூட்டியே வரைவோலை வழங்கினாலும், தேவையான அளவு பெட்ரோல், டீசல் கொடுப்பதில்லை என்றும் கூறினார்.
Must Read : அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர்த்து வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது - உயர் நீதிமன்றம் உத்தரவு
மேலும், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலை 25 சதவீதம் கூட தராததால் பங்க்கை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.