சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மே மாதம் 21ஆம் தேதி குறைத்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. அதன்படி, சென்னையில் லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 32ஆவது நாளாக இன்றும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் இன்று (ஜூன் 22, 2022) நேற்றையை விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலையில் மாற்றம் செய்யப்படாததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகின்றன. அங்கே, கடந்த சில நாட்களாகவே பங்குகள் செயல்படும் நேரம் குறைந்து வருவதுடன் பல்வேறு பங்குகள் பூட்டப்படுகின்றன.
பொதுவாக காலை 7 மணிக்கு பங்குகள் திறக்கப்பட்டு நள்ளிரவு வரை செயல்படும். சில பங்குகள் 24 மணி நேரமும் செயல்படும். இந்நிலையில், தற்போது காலை 9 மணிக்கு திறக்கப்படும் பங்குகள் இரவு 10 மணிக்கே மூடப்படுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது குறித்து பங்க் விற்பனையாளர்கள் கூறுகையில், இது வரையில் பங்குகளுக்கு கடன் முறையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் வழங்கி வந்தன என்றும், தற்போது முன்பணம் கட்டினால் மட்டுமே எரிபொருளை விநியோகம் செய்யப்படுகிறது என்றும், இதனால் பெரும்பாலான பங்குகள் முறையாக செயல்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
Must Read : காவிரி ஆற்றில் ஆபத்தான முறையில் பரிசல் பயணம்... விரைந்து பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெட்ரோல்-டீசல் விற்பனை குறைந்திருப்பதாக சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Petrol, Petrol Diesel Price, Petrol price, Petrol-diesel