பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மே மாதம் 21ஆம் தேதி குறைத்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. அதன்படி, சென்னையில் லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் தொடர்ந்து 31ஆவது நாளாக இன்றும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் இன்று (ஜூன் 21, 2022) நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலையில் மாற்றம் செய்யப்படாததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், கோவையிலுள்ள பெட்ரோல் பங்க்குகளுக்கு தேவையான பெட்ரோல், டீசல், கிடங்குகளிலிருந்து வழங்குவதில் விற்பனைக்கு ஏற்றவாறு ரேஷன் முறை பின்பற்றப்படுவதால் கோவையில் பெட்ரோலுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
Must Read : அதிமுக பொதுச் செயலாளர் ஆகிறாரா எடப்பாடி பழனிசாமி? - தனித் தீர்மானம் இன்று இறுதி செய்ய வாய்ப்பு
சில பங்க்குகளில் ‘விற்பனை இல்லை’ என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளன. அங்கே, இந்தியன் ஆயில் கார்பரேஷன் தவிர, பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் டீலர்களுக்கு டீசலை மட்டும் ரேஷன் முறையில் வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.