Home /News /business /

ஜூன் 20 : பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்

ஜூன் 20 : பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்

பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்

Petrol Diesel Price Today : சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 30ஆவது நாளாக இன்றும் ((ஜூன் 20, 2022)) மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.

    இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த மே மாதம் 21ஆம் தேதி குறைத்தது. அதன்படி, டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும், பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசுகளும் குறைக்கப்பட்டன. அதன்படி, சென்னையில் லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டீசல் விலை 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது.

    அதன் பின்னர் தொடர்ந்து 30ஆவது நாளாக இன்றும் பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி சென்னையில் இன்று (ஜூன் 20, 2022) நேற்றையை விலையில் மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலையில் மாற்றம் செய்யப்படாததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 120 டாலராக உயர்ந்துள்ள போதும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சுமார் ஒரு மாத காலமாக உயர்த்தப்படவில்லை. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோலை 20 முதல் 25 ரூபாய் அளவிற்கும் டீசலை 14 முதல் 18 ரூபாய் அளவிற்கும் குறைவாக விற்க வேண்டி இருப்பதாக தனியார் பெட்ரோல் பங்குகள் தெரிவித்துள்ளன.

    Must Read : 10th, 12th பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு... தெரிந்துகொள்வது எப்படி?

    இது குறித்து இந்திய பெட்ரோலியத் துறை கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால் எரிபொருட்களின் விலை மீண்டும் உயர்த்தப்படலாம் என்று சொல்லப்படுவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price, Petrol-diesel

    அடுத்த செய்தி