Home /News /business /

பெட்ரோல், டீசல் : இன்றும் (பிப்ரவரி 1, 2022) விலையில் மாற்றம் இல்லை

பெட்ரோல், டீசல் : இன்றும் (பிப்ரவரி 1, 2022) விலையில் மாற்றம் இல்லை

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

Petrol, Diesel Price Today : சென்னையில் பெட்ரோல் விலை 89ஆவது நாளாக இன்றும் (பிப்ரவரி 1, 2022) மாற்றம் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    எரிபொருட்களின் விலையை கச்சா எண்ணெய் விலைக்கேற்ப தினந்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

    இதற்கிடையில், கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி, மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் குறைத்து அறிவித்தது. அதனைத் தொடர்ந்து 80 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருகிறது.

     































    நகரம்பெட்ரோல்டீசல்
    Delhi95.4186.67
    Mumbai109.9894.14
    Chennai101.4091.43
    Kolkata104.6789.79
    Source: Indian Oil

    சென்னையில் இன்று பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 101.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, டீசல் விலையும் நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 91.43 ரூபாய் என்ற விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 89ஆவது நாளாக விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

    Must Read : அஞ்சல் நிலையத்தில் உள்ள அக்கவுண்டை முடிக்கிறீர்களா? - இந்த விதியை பின்பற்றுங்கள்!

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வருவருவதால் வகான ஓட்டிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியும், நிம்மதியும் அடைந்துள்ளனர். உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price

    அடுத்த செய்தி