Home /News /business /

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (டிசம்பர் 30, 2021)

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (டிசம்பர் 30, 2021)

பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலை

Petrol, Diesel Price Today | சென்னையில் பெட்ரோல் விலை 56 ஆவது நாளாக இன்றும், மாற்றம் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Petrolசர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

    இந்நிலையில், மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 3ஆம் தேதி, பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் குறைத்து அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கட்டுக்குள் இருந்து வருகிறது.

    சென்னையில் இன்று பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 101.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, டீசல் விலையும் நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 91.43 ரூபாய் என்ற விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் படி தொடர்ந்து 56 நாள்களாக விலையில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது.

     































    நகரம் பெட்ரோல் டீசல்
    Delhi 95.41 86.67
    Mumbai 109.98 94.14
    Chennai 101.40 91.43
    Kolkata 104.67 89.79
    Source: Indian Oil

    இந்நிலையில், ஜார்கண்டில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 25 ரூபாய் குறைப்பதாக, அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய முதலமைச்சர் ஹேமந்த் சோரன், இருசக்கர வாகனங்களுக்கு மட்டும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 25 ரூபாய் குறைப்பதாகவும், வரும் குடியரசு தினம் முதல் இந்த அறிவிப்பு அமல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

    Must Read : சென்னையில் 6 மாதங்களில் இல்லாத அளவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

    அவரது தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அம்மாநிலத்தில் ஆட்சியை பிடித்து, இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் ஜார்கண்டில் பெட்ரோல் விலை, ஜனவரி 26ம் தேதி முதல் 73 ரூபாய் ஆக குறைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price hike

    அடுத்த செய்தி