Home /News /business /

டிசம்பர் 14 : பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

டிசம்பர் 14 : பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

பெட்ரோல்-டீசல்

பெட்ரோல்-டீசல்

சென்னையில் பெட்ரோல் விலை 40ஆவது நாளாக இன்றும், மாற்றம் இன்றி அதே விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

    இந்நிலையில், மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 3ஆம் தேதி, பெட்ரோல் மீதான கலால் வரியில் 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயையும் குறைத்து அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை கட்டுக்குள் இருந்து வருகிறது.

    சென்னையில் இன்று பெட்ரோல் விலையானது நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 101.40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, டீசல் விலையும் நேற்றைய விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு 91.43 ரூபாய் என்ற விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இன்றி அதேவிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    பெட்ரோல், டீசல் விலை ஒரு மாத காலத்திற்கு மேலாக, தொடர்ந்து மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்துள்ளனர்.

    Must Read : ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பெருவிழா... இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது...

    40-நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Petrol, Petrol Diesel Price

    அடுத்த செய்தி